உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷனை வதம் செய்து மகிஷாசுரவர்தினியாக குலசை முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மகிஷனை வதம் செய்து மகிஷாசுரவர்தினியாக குலசை முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

உடன்குடி; குலசேகரன்பட்டணம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அன்னை முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன்
கோவில் தசரா திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. 10ம் திருநாளான நேற்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து சூரன் முன்னே செல்ல அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் சென்று கட ற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே எழுந்தருளி லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் மகிஷாசூரசம்காரம் செய்தல் நடந்தது. 11ம் திருநாளான இன்று (25ம் தேதி) சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை, 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை நடக்கிறது. 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வருதல், அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, ஆராதனை, 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருதிருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் காப்பு களையப்படும். 3,500 போலீசார் பாதுகாப்பு குலசேகரன்பட்டணம் தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரகடி.ஐ.ஜி., பிரவேஷ்குமார் தலைமையில் துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 5 ஏ.டி.எஸ்.பி., க்கள், 20 டி.எஸ்.பி., க்கள், 68 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் மற்றும் போலீசார் என 3,500 பேர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !