உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் சித்தி விநாயகர் கோவில் 11 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சிதம்பரம் சித்தி விநாயகர் கோவில் 11 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சிதம்பரம்: சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூர். செல்வகணபதி நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் 11ம் ஆண்டு கும்பாபிஷேகம் தின விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 8.30 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனை, விநாயகர் பெருமானுக்கு சிறப்பு மஹா அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் தீபாராதனை, பிரசாதம் வழங்கி, பின் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.விழாவில் செல்வகணபதி நகர். தாயம்மாள்நகர் கூட்டமைப்பு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தண்டபாணி ஐயர், சிவமணி அர்ச்சகர் பூஜைகளை செய்தனர். விழா ஏற்பாடுகள் அறங்காவல் குழு தலைவர் செயபாலு தலைமையில், கருணாநிதி, இராமலிங்கம், இராசேந்திரன், குமார் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !