சந்திர கிரகணம்; பழநி முருகன் கோயிலில் நாளை நடை அடைப்பு
பழநி: பழநி கோயிலில் நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெற்று சன்னதிகள் நடை அடைக்கப்படும். பழநி முருகன் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் புரிந்து வருகிறார்கள். பவுர்ணமி திதி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவர். இந்நிலையில் நாளை (அக்.28) நள்ளிரவு 1:05 மணி முதல் நள்ளிரவு 2:23 வரை பர்ஸவ சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதனால் இரவு 8:00 மணிக்கு மலைக் கோயிலில் அர்த்தஜாம பூஜை நடைபெறும். அதன் பின் சன்னதிகள் அடைக்கப்படும். சந்தர கிரகணம் நிறைவுபெற்ற பின் கோயிலின் அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்படும். அக்.29 ஞாயிறு, அதிகாலை 4.30 மணிக்கு கலச பூஜை, ஹோமம், அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதன் பின் விஸ்வரூப தரிசனம் மற்றும் நித்திய பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.