கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழா; ஜீவசமாதியில் அன்னாபிஷேகம்
ADDED :712 days ago
நாகப்பட்டினம்; நாகை, கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பரணி விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த வடக்கு பொய்கைநல்லூர் இதய பகுதியில் அமைந்துள்ளது கோரக்க சித்தர் ஆசிரமம். இங்கு கிழக்கு நோக்கி கோரக்கர் ஜீவசமாதி பீடம் உள்ளது.18 சித்தர்களில் முதன்மை சித்தரான கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி மாத பவுர்ணமி பரணி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இவ்வாண்டு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, கோரக்கர் ஜீவசமாதியில் அன்னாபிஷேகம் மற்றும் பவுர்ணமி விழா சிறப்பு தீபாரதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.