சீர்காழி தாளபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் ; பக்தர்கள் பரவசம்
ADDED :712 days ago
மயிலாடுதுறை; சீர்காழி தாளபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திராவிட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிறுகோலக்காவில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற ஓசை நாயகி அம்பாள் சமேத தாளபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரின் தாளத்திற்கு ஓசை கொடுத்த தலமாக விளங்கி வருகிறது. பிரசித்தி பெற்ற இத்தலத்தில் ஐப்பசி பௌர்ணமி தினமான இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.