/
கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம்; காய்கறிகளால் சிறப்பு அலங்காரம்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம்; காய்கறிகளால் சிறப்பு அலங்காரம்
ADDED :713 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை மூலவர் வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு மூலவருக்கு அன்னம், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவனடியார்களின் கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்களின் வேத மந்திரத்துடன் மஹா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அன்னம் களையப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.