உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை திருப்பதி ஏழுமலைமான் கோவிலில் சன்னதிகள் கட்டுமான பணிக்கு பூஜை

உளுந்தூர்பேட்டை திருப்பதி ஏழுமலைமான் கோவிலில் சன்னதிகள் கட்டுமான பணிக்கு பூஜை

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி ஏழுமலைமான் கோவில் கட்டுமான பணியில் யோக நரசிம்மர் சன்னதி, வரதராஜா பெருமாள் சன்னதி, ஊஞ்சல் மண்டபம், ராமானுஜர் சன்னதி, சுவாமி வேதாந்தா தேசிகர் சன்னதி ஆகியவற்றிற்க்கான கட்டுமான பணிக்கான பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி ஏழுமலைமான் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அவற்றில் யோக நரசிம்மர் சன்னதி, வரதராஜா பெருமாள் சன்னதி, ஊஞ்சல் மண்டபம், ராமானுஜர் சன்னதி,  சுவாமி வேதாந்தா தேசிகர் சன்னதி ஆகியவற்றிற்க்கான கட்டுமான பணிக்கான பூஜைகள் நடந்தது. இதற்காக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு முன்னாள் உறுப்பினரும், அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளருமான குமரகுரு தலைமை தாங்கி பூஜைகளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !