உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோயில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

திருப்பூர் கோயில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

திருப்பூர், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுபகுதியில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவன் அருள்பாலித்தார்.  லட்சுமிநகர், அருணாச்சலேஸ்வர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஊத்துக்குளி ரோடு சுக்ரீஸ்வரர் கோவிலில் நடந்து விழாவில் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த ஈசனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !