திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம்
ADDED :820 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிவனடியார்களின் அரோகரா கோஷத்துடன் மேளதாளம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.