உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்சவம்; கருட வாகனத்தில் சுவாமி உலா

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்சவம்; கருட வாகனத்தில் சுவாமி உலா

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்சவத்தையொட்டி பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்சவம் அக்., 25 தொடங்கி நடந்தது. தினமும் பெருமாள் சயன திருக்கோலம், கொண்டை முடி அலங்காரம், ஊஞ்சல் சேவை என அருள்பாலித்தார். அப்போது பெருமாளுக்கு வாசனை திரவியங்கள் கொண்டை முடியில் சாற்றப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து இன்று காலை 10:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளினார். அப்போது சிறப்பு தீபாராதனைகள் நடந்து முக்கிய வீதிகளில் வலம் வந்தார். வீதி உலாவில் மக்களுக்கு தைலம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் மதியம் 12:00 மணிக்கு மேல் திருக்கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி நாளான நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி மாலை 6:00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !