உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு அக். 28 இரவு 7:00 மணிக்கு நடைசாத்தப்பட்டது. அக். 29 அதிகாலை 2:00 மணிக்கு கோயிலில் இருந்து பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு கிரகண பூஜை முடிந்து கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோட்டை வராகி வழிபாட்டு மன்றத்தில் அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து கிரகண பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !