சொர்ணகாளியம்மன் கோயிலில் ஐப்பசி பூஜை
ADDED :715 days ago
கடலாடி: கடலாடியில் உள்ள வணிக வைசிய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சொர்ணகாளியம்மன் கோயிலில் ஐப்பசி மாத சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் சொர்ண காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூஜகர் பூமிநாதன் அபிராமி அந்தாதி, சிவபுராணம் உள்ளிட்ட பாடல்களை பாடினார். ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றினர்.