உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்

தூத்துக்குடி ; தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு கொடியேற்றபட்டு, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடந்தது. விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவில் கோவில் அதிகாரி, அறங்காவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !