உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பட்டம்; அயோத்தியில் காஞ்சி மடாதிபதி வழங்கினார்

வேதத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பட்டம்; அயோத்தியில் காஞ்சி மடாதிபதி வழங்கினார்

அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் காஞ்சி விஜயேந்திர சுவாமிகள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார். சங்கர மடத்தில் அக்.,11முதல் நவ. 1 வரை தங்கி பூஜைகளை மேற்கொள்கிறார். நேற்று அயோத்தியில் வேத பண்டிதர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் வல்லநாடு ரிக்வேத கணபாடிகள் ராகவேந்திர கணபாடிகளுக்கு வேத பாஷ்யரத்னம் எனும் பட்டத்தினை வேத பண்டிதர்கள் மாநாட்டில் காஞ்சி சங்கரமடம் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார். இதேபோல் யஜூர் வேதத்தில் சிறந்து விளங்கியமைக்காக வல்லநாடு கவுசிக் என்ற கல்யாண ராமனையும், காஞ்சி மடம் மடாதிபதி கவுரவித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் விஜயேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !