நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
ADDED :711 days ago
நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று தொடங்குகிறது. நாமக்கல் நகரின் மைய பகுதியில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில் சாந்த சொரூபியாக நின்றபடி ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். கோவிலில் கடைசியாக, 2009ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், வரும் நவ.,1ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று மாலை, 4:00 மணிக்கு, முதல் கால யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது. நாளை காலை மகாசாந்தி மற்றும் அதிவாச ஹோமம், பிரபந்த சமர்ப்பணம் நடக்கிறது. நவ.,1ம் தேதி காலை, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது.