ஐப்பசி கிருத்திகை; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1019 days ago
கோவை; ஆர். எஸ். புரம் வின்சென்ட் காலனி உழவர் சந்தை அருகில் இருக்கும் ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.