உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ஆடி வெள்ளி; 65 யாக குண்டம் அமைத்து சிறப்பு யாகம்.

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ஆடி வெள்ளி; 65 யாக குண்டம் அமைத்து சிறப்பு யாகம்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு காவிரியில் தண்ணீர் வர வேண்டி 65 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு ஓளிலாயம் 18 சித்தர்கள் பீடம் அமைந்துள்ளது. மறைந்த ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த இந்த ஒளிவாயத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இங்கு வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்நிலையில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு காவிரியில் தண்ணீர் வர வேண்டியும் மழை பெய்ய வேண்டியும் 18 சித்தர்கள்  ஒளிலாயத்தில் சிறப்பு   யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது. 65 மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு மூலிகைகள் கொண்டு 65 மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்ட பரிவார பூஜைகளுடன் மகா யாகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஒளிலாயத்தில் அருள்பாளிக்கும்   சிவலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் செய்யபட்டது.இந்த யாகத்தில் நாடி. செந்தமிழ் செல்வன் மற்றும் திரளான பக்தர்கள், கிராமத்தினர்கள்  பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !