ஐப்பசி புதன்; வேணுகோபால சுவாமி கோவிலில் உற்சவருக்கு அபிஷேகம்
ADDED :1043 days ago
கோவை; காந்தி பார்க், வேணுகோபால சுவாமி கோவிலில் ஐப்பசி இரண்டாவது புதன் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பாமா ருக்மணி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.