காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாலாலயம்
ADDED :763 days ago
காரியாபட்டி: காரியாபட்டி ஆயிர வசிய காசுக்கார செட்டியார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, பழமை வாய்ந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. விழாவிற்கு திருப்பணிகள் தொடக்கமாக சுப்பிரமணிய சுவாமி, நவக்கிரகங்கள், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, யாகசாலை பூஜை, கும்ப பூஜை செய்யப்பட்டு, பாலாலய சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீருடன் கும்பங்கள் கோவில் உள்பிரகாரத்தை வலம் வந்தது. பாலாலயம் செய்யப்பட்ட சுவாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. காரியாபட்டி, சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உறவின்முறை நிர்வாகிகள் பாலாஜி, பாஸ்கரன், சண்முகம், செண்பகமூர்த்தி, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.