உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் விமான பாலாலய பூஜை

லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் விமான பாலாலய பூஜை

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் விமான பாலாலய பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழையூர் பகுதியில் பழமையான லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் கோபுரத்தை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலைத்துறை அனுமதி வழங்கியது. இதையொட்டி இன்று காலை கோவில் வளாகத்தில் கோபுரம் புதுப்பிக்கும் பணிக்கான விமான பாலாலய சிறப்பு பூஜை நடந்தது. பூதேவி, ஸ்ரீதேவி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் உற்சவர் முன்னிலையில் ஹோமம் நடந்தது. பூஜைகளை காரமடை சுதர்சன பட்டர் சுவாமிகள் நடத்தினார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !