உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி திருவாதிரை; ஆடல்வல்லானை வணங்கிட நல்லதே நடக்கும்

ஐப்பசி திருவாதிரை; ஆடல்வல்லானை வணங்கிட நல்லதே நடக்கும்

சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். சிவ வழிபாட்டுக்கு திருவாதிரை விரதம் மிகவும் உகந்தது. இந்த நட்சத்திரத்தை கொண்டே சிவனை ஆதிரையின் முதல்வன், ஆதிரையான் என்பர். இன்று சிவாலயத்தில் நடராஜர், சிவகாமி அம்மனை தரிசிக்க வேண்டும்.
ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம்!

திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும். முன்வினைப் பாவம் அனைத்தும் விலகி வாழ்வு வெளிச்சமாகும். இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் தான் வியாக்கிரபாத முனிவருக்கு பாற்கடலையே பரிசாகப் பெற்று உபமன்யு என்ற மகன் கிடைத்தான். கார்க்கோடகன் என்ற பாம்பு இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் வானுலகம் செல்லும் பேறு பெற்றது. அந்தணர் ஒருவர் இந்த விரதத்தை முறைப்படி அனுசரித்ததால் மனித உடலுடனே வானுலகம் சென்று மீண்டும் திரும்ப வரும் பேறு பெற்றார். ஆடல்வல்லானை வணங்கி ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அறுத்து இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !