உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி சகஸ்ர சண்டி யாகம்; முள் படுக்கை தியானம்

உலக நன்மை வேண்டி சகஸ்ர சண்டி யாகம்; முள் படுக்கை தியானம்

சூலூர்: உலக நன்மை வேண்டி நடக்கும் சகஸ்ர சண்டி யாகத்தில் முள் படுக்கை தியானம் செய்யப்பட்டது.சூலூர் அடுத்த ஊத்துப்பாளையத்தில், ஜெய்ஹிந்த் பாரத பண்பாடு கலாச்சார அறக்கட்டளை சார்பில், உலக நன்மை வேண்டி, கடந்த, 24 ம்தேதி கணபதி ஹோமத்துடன் சகஸ்ர சண்டி ஹோமம் துவங்கி நடந்து வருகிறது. இன்று அகோர சிவ ஹோமம் துவங்கியது. தொழில் வளம் மேம்படவும், உலக ஒற்றுமை ஓங்கவும், நீர் வளம் பெருகவும், வேண்டி தினமும் முள் படுக்கை தியானம் செய்யப்படுகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் நடக்கும் யாகத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !