அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் பஜனை
ADDED :807 days ago
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில், அவிநாசி சண்முகசுந்தரம் குழுவினரின் பக்தி பாடல்கள் பாடும் பஜனை நடைபெற்றது.
அவிநாசி, வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில்,பஜனை பிரியரான ஹனுமானுக்கு வருடம் முழுவதும் பக்தி பாடல்கள், இன்னிசை, ஆராதனைகள் என நடைபெற்று வருகிறது. இதில், அவிநாசி சண்முகசுந்தரம் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் செய்திருந்தனர்.