உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை

செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை

செஞ்சி; செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராம பஜனை நடந்தது.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் மதுர கவி ஆழ்வார் திரு நட்சத்திர பரிபாலனை சபை சார்பில் ஐப்பசி மாத ஸ்ரீராம பஜனை நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்டராமர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அலங்காரமும் செய்தனர். காலை 10 மணிக்கு ஸ்ரீராம பஜனை துவங்கியது. திண்டிவனம் சபை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாராயணன் திருமால் துதி பாடினார். துரைராஜ் வரவேற்றார். முதல் ஆழ்வார்கள் வைபவம் தலைப்பில் ஒலக்கூர் தீனதயாளன் சிறப்புரை நிகழ்த்தினார். பகல் 1 மணிக்கு பஜனை நிறைவும், மகா தீபாராதனையும் நடந்தது. ஆதிமூலம் நன்றி கூறினார். உபயதாரர்கள் ரங்கநாதன், வனஜா, நிர்வாகிகள் பாரதி துரை, தீனதயாளன், சுந்தர் மற்றும் செஞ்சி வட்டத்தை சேர்ந்த ஆண்டாள், பாகவதர் கோஷ்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !