உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் கோயில் சார்பில் ரூ. 96 லட்சத்தில் வாகன காப்பகம்

திருப்பரங்குன்றத்தில் கோயில் சார்பில் ரூ. 96 லட்சத்தில் வாகன காப்பகம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருக்கல்யாண ஸ்தலமாக விளங்குவதால் கோயிலில் திருமணம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தவிர நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் ஊருக்குள் உள்ளன. முகூர்த்த நாட்களில் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் 100 முதல் 300 திருமணங்கள்வரை நடக்கின்றன. தவிர திங்கள், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள், திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனத்திற்கு வருகின்றனர். பக்தர்கள், திருமணங்களுக்கு வருவபவர்களின் வாகனங்கள் திறுத்துவதற்கு தனியாக வாகன தாப்பகம் இல்லை. இதனால் பஸ்கள் செல்லும் ஜி‌.எஸ்.டி., ரோடு, ரத வீதிகளில் வாகளங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து தெரிசல் ஏற்படுகிறது. தெப்பக்குளம் கரைகள் நான்கு சக்கர வாகன காப்கமாக பயன்படுத்தப்பட்டாலும் மிக குறைந்த அளவிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்க முடிகிறது. இதனால் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் சரவணப் பொய்கை செல்லும் வழியில் 82 சென்ட்டில் ரூ. 96 லட்சத்தில் புதிய வாகன காப்பகம் அமைக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !