உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமை ஆதீனம் 25வது குருமகா சந்நிதானம் குருபூஜை

தருமை ஆதீனம் 25வது குருமகா சந்நிதானம் குருபூஜை

மயிலாடுதுறை; மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 25வதுகுருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணியதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 52ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. அதனையொட்டி ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள கயிலை குருமணிகள் குரு மூர்ததத்திற்கு தருமபுரம் ஆதீன வேத பாடசாலை மாணவர்கள் வேத மந்திரங்கள் ஓத, தேவார பாடசாலை மாணவர்கள் பதிகங்கள் பாட, மங்கள வாத்தியம் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளி குருமூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடந்தது. இதனையொட்டி குருமூர்தத்தில் திருமுறைப்பாராயணம், சொற்பொழிவுகள் நடந்தது. இதில் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !