உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா; சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழா; சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராசிபுரம்; ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 


நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்மன் கழுத்தில் நிலையான தாலியும், ஆண்டு முழுவதும் கம்பம் பிடுங்காமல் இருப்பதால், ‘நித்திய சுமங்கலி மாரியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு கடந்த, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் , ஊர்வல நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று நடந்த, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியில், பூசாரி கையில் பூச்சட்டியை ஏந்தியவாறு சென்றார். அப்போது, பக்தர்கள் நாணயங்களை பூச்சட்டியில் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான சாட்டையடி திருவிழா நடந்தது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூசாரியிடம் சாட்டையடி வாங்கி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !