உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை பூஜை.. பக்தர்களுக்கு அனுமதி உண்டா?; வனத்துறை ஆய்வு

சதுரகிரியில் பிரதோஷம், அமாவாசை பூஜை.. பக்தர்களுக்கு அனுமதி உண்டா?; வனத்துறை ஆய்வு

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாடுகளுக்கு பக்தர்களை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து வனத்துறை ஆலோசித்து வருகிறது.

கடந்த 10 நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சதுரகிரி மலைப்பகுதி ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாடுகளுக்காக நவ. 10 முதல் பக்தர்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்பது குறித்து வனத்துறையினர் மலைப்பகுதியில் கள ஆய்வு செய்து, துணை இயக்குனரிடம் ஆலோசித்து வருகின்றனர். பக்தர்களை அனுமதிப்பது குறித்து நாளை (நவ 9) அறிவிக்கப்படும் என சாப்டூர் வனசரகர் செல்வமணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !