ராஜ அலங்காரத்தில் விநாயகர்; தடத்துப் பிள்ளையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :698 days ago
அவிநாசி: அவிநாசி அடுத்த ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள தடத்துப் பிள்ளையார் கோவிலில் கடந்த வாரம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டல பூஜையில், நாள்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு விநாயகப் பெருமான் அருள் பாலித்து வந்தார். நேற்று மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, ராஜ அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.