உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கடலில் நீராட பக்தர்களுக்கு தடை; சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருச்செந்தூர் கடலில் நீராட பக்தர்களுக்கு தடை; சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் துவங்கி,  கடலில் நீராடி வழிபட்டு வருகின்றனர். இலங்கை அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் திருச்செந்தூர் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் கந்த சஷ்டி விழாவிற்கு வந்த பக்தர்கள் கடலில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் கடற்கரையில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடலுக்குள் இறங்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !