உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மாட வீதியில் முருகர் திருத்தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை மாட வீதியில் முருகர் திருத்தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மாட வீதியில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒரு கி.மீ., தூரத்திற்கு புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.  புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் முருகர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்குவதை முன்னிட்டு, நேற்று இரண்டாம் நாள் உற்சவத்தில், கோவில் காவல் தெய்வமான பிடாரியம்மன் சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !