மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு
ADDED :845 days ago
சபரிமலை; ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது; பக்தர்களுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.