முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சிவகங்கை; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழமையான இக்கோயிலில் இதற்கு முன்பு 1995 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கும்பாபிஷே நடத்த திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்தது. புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் தெற்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோயில் முன்பாக 16 கால் கல் மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டது. மேலும் கோயில் உள்ளே புதிய கல்மண்டபத்துடன் அஷ்டலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 40 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, நவம்பர் 13ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, ஆறு கால பூஜை நடந்தது. தொடர்ந்து, அனைத்து கோபுரங்கள் மற்றும் சுவாமிகளுக்கு இன்று காலை 10 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.