வடமதுரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா
ADDED :691 days ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி வழிபாடு நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. அய்யலூர் தீத்தாகிழவனூர் பேசும் பழனிஆண்டவர், தூங்கணம்பட்டி அனுகிரக பாலமுருகன், தென்னம்பட்டி பாலமுருகன் என அனைத்து முருகன் சன்னதிகளிலும் கந்த சஷ்டி வழிபாடுகள் நடந்தன.