உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேனே ஈசனே.. திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்டது முக்தி தலம்

அருணாசலேனே ஈசனே.. திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள்.. விழாக்கோலம் பூண்டது முக்தி தலம்

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று, 17ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தில் தங்க கொடிமரம் முன் அண்ணாமலையார் வைரகையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அண்ணாமலையாருக்கு மாலை அணிந்து, ஏராளமான பக்தர்கள் விரதம் துவங்கினர். கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் (இன்று) காலை உற்சவத்தில் ராஜகோபுரம் முன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். 23ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், 26ல், அதிகாலை, 4:00,  மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00, மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.  தீப திருவிழா தொடங்கியுள்ள நிலையில் கோவில் வளாகம், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !