உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு; சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை

ஐயப்பன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு; சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை

சோழவந்தான்: கார்த்திகை மாத முதல் நாளான இன்று வாடிப்பட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் துவங்கியது. அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயில், விக்கிரமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் கிராமங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்ல விரதத்தை துவக்கினர். யாக சாலை பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனைகள், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !