கார்த்திகை தீபத் திருவிழா; சூரியபிறை வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா
ADDED :795 days ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று, காலை உற்சவத்தில் சூரியபிறை வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார்) எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் முருகேஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பஸ் உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.