வடபழநி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ; பக்தர்கள் குவிந்தனர்
சென்னை: கந்த சஷ்டியை முன்னிட்டு, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
சென்னை நகரில், பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழநி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா கந்த சஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவிற்கான பந்தக்கால் இம்மாதம் 8ல் நடப்பட்டது. தொடர்ந்து, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் விழா துவங்கியது. விழாவில் தினமும் லட்சார்ச்சனை நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடகி பகதர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை 19ம் தேதி இரவு, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. 20 முதல் 23 வரை, இரவு, சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.