உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு சாஸ்தா 3; வில் ஏந்திய சாஸ்தா

தினமும் ஒரு சாஸ்தா 3; வில் ஏந்திய சாஸ்தா

தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் பற்றிய தகவல் இப்பகுதியில் இடம் பெறுகிறது.

தேவலோகத்தில் வளர்க்கப்பட்ட ஐயப்பனை ஒரு சமயத்தில் பூமியில் மண்பானை செய்யும் ஒருவரிடம், இந்திரன் ஒப்படைத்தார்.  ‘அய்யனார்’ எனப் பெயரிட்டு அந்த குழந்தையை வளர்த்தார். இந்திரனின் வழிகாட்டுதலால் அவரே மதுரை கோச்சடை பகுதியின் காவல் தெய்வமாக இக்கோயிலில் வீற்றிருக்கிறார். பிற்காலத்தில் முத்தையா சுவாமிக்கும் இங்கு சன்னதி உருவாக்கப்பட்டது. தற்போது இது ‘முத்தையா கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.
கோயிலில் நுழைந்ததும் சுதை சிற்பங்களாக முத்தையா, வில்லாயுதம் ஏந்திய அய்யனார் குதிரை மீது அமர்ந்தபடி உள்ளனர். கர்ப்ப கிரகத்தில் பூரணை, புஷ்கலையுடன் அய்யனார் கிழக்கு நோக்கி இருக்கிறார். பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில் புளிய மரமே தலவிருட்சம். யோகக்கலையில் சிறந்த பதஞ்சலி முனிவர் இம்மரத்தின் அடியில் தவம் புரிந்தார்.
மதுரையில் இருந்து மேலக்கால் சாலை வழியாக 5 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 12:00 மணி, மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 97912 02527, 93458 29189


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !