/
கோயில்கள் செய்திகள் / கேட்டது கொடுக்கும் கற்பக விருட்ச வாகனத்தில் அருணாச்சலேஸ்வரர் உலா; மனமுருகி பக்தர்கள் வழிபாடு
கேட்டது கொடுக்கும் கற்பக விருட்ச வாகனத்தில் அருணாச்சலேஸ்வரர் உலா; மனமுருகி பக்தர்கள் வழிபாடு
ADDED :704 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நான்காம் நாள் இரவு உற்சவத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் கேட்டது கொடுக்கும் கற்பக விருட்ச வாகனத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் மனமுருகி வழிபாடு செய்தனர். உற்சவத்தில், ராஜகோபுரம் முன் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பத்தாம் நாள் கார்த்திகை தீபத் விழாவில், 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பயன்படுத்தும் நெய், பிரார்த்தனை நெய் குட காணிக்கை விற்பனை நிலையம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்யை காணிக்கையாக செலுத்தினர்.