/
கோயில்கள் செய்திகள் / மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனை துதிக்கையிலே.. சபரிமலையில் மனம் உருகி வேண்டிய மாற்றுத்திறனாளி பக்தர்
மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனை துதிக்கையிலே.. சபரிமலையில் மனம் உருகி வேண்டிய மாற்றுத்திறனாளி பக்தர்
ADDED :703 days ago
சபரிமலை ; சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. இதில், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். நேற்று சபரிமலை வந்த பக்தர்கள், பதினெட்டாம் படி ஏறுவதற்கும், மூலவரை தரிசிப்பதற்கும் பல மணிநேரம் காத்திருக்க நேரிட்டது. இதனால், சன்னிதானம், மரக்கூட்டம், நீலிமலை, பம்பை போன்ற இடங்களில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். கடந்த மூன்று நாட்களாக 24 மணி நேரம் இடைவெளி இல்லாமல் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதனால் நடைப்பந்தலில் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. காடு மலை கடந்து, சன்னிதானம் வந்த ஒரு மாற்றுத்திறனாளி பக்தர் மனம் உருகி பிரார்த்தனை செய்தது அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது.