உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம்: பக்தர்கள் பரவசம்

சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம்: பக்தர்கள் பரவசம்

கூடலூர்: கூடலூர், நம்பாலக்கோட்டை சிவன்மலையில் ஏற்றப்பட்ட மகா கார்த்திகை தீபத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கூடலூர் நம்பகோட்டை சிவன்மலை, சிவன் கோயிலில் மகா கார்த்திகை தீபம் திருவிழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 4:00 மணிக்கு துவங்கிய கிரிவலம் ஊர்வலம், கோவிலை சுற்றிய மலை பாதையில் வலம் வந்து கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு, சிவன்மலை வளர்ச்சி சமூக நல அறக்கட்டளை தலைவர் கேசவன மகா கார்த்திகை தீபம் ஏற்றினார். கூடியிருந்த பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள். இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி குழு சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !