காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆகாச தீபம்
ADDED :761 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாத (திங்கட்கிழமை ) தினந்தோறும் அந்தி சாயும் வேளையில் கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை மண்டபம் அருகில் பிரம்மாண்டமான ஆகாச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று (27ம் தேதி) திங்கட்கிழமை மாலை இந்த நிகழ்ச்சியில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா ரெட்டியின் குடும்பத்தினர் மற்றும் இணை ஆட்சியர், தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.