நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நடப்பாண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம்
ADDED :688 days ago
நாமக்கல்: குளிர்காலம் துவங்கியதையொட்டி, நடப்பாண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
நாமக்கல்லில், ஒரே கல்லால் ஆன, 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். குளிர்காலம் துவங்கியதையொட்டி, ஆஞ்சநேயருக்கு நடப்பாண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.