சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :835 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரம் மற்றும் விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.