உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் 5 பேர் பதவி ஏற்பு; யார் தலைவர்.. நீடிக்கும் சிக்கல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் 5 பேர் பதவி ஏற்பு; யார் தலைவர்.. நீடிக்கும் சிக்கல்!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் தியாகராஜனின் தாயார் ருக்மணி உட்பட 5 பேர் நேற்று பதவி ஏற்றனர். இவர்களில் 3 பேர் தலைவர் பதவியை விரும்புவதால் குழுத்தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்துகண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே -23ல் காலமானார். நவ.,8 ல் அமைச்சர் தியாகராஜனின் தாயார் ருக்மணி, அரசு ஒப்பந்தக்காரர் செல்லையா, அரசு வழக்கறிஞர் அன்புநிதி மனைவி மீனா, டாக்டர் சீனிவாசன், முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் சுப்புலட்சுமி ஆகியோரை அறங்காவலர்களாக அறநிலையத்துறை நியமித்தது.இவர்கள் நேற்று பதவி ஏற்றனர். குழுத்தலைவர் தேர்வு வேறு ஒரு நாளில் நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 5 பேரில் ஒருவரை தலைவராக அறங்காவலர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் 5 பேரில் 3 பேர் தலைவர் பதவியை விரும்புகின்றனர். இதனால் குழுத்தலைவரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. கோயில் தரப்பில் கூறியதாவது: பதவி ஏற்ற அன்றே குழுத்தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதி. அதேசமயம் நிர்வாக காரணங்களுக்காக என்றுக்கூறி தேர்வு செய்வதை தள்ளிவைக்க முடியும். தலைவர் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, அவர் தலைமையில் அறங்காவலர் குழுக்கூட்டத்தை கூட்ட முடியும். கோயில் திருப்பணி, வளர்ச்சி பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க முடியும். தலைவர் தேர்ந்தெடுக்கப்படாததால் அறங்காவலர்கள் பெயரளவில் மட்டுமே செயல்பட முடியும். இது கோயில் திருப்பணியை பாதிக்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !