கார்த்திகை பஞ்சமி; ஆதிவராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :689 days ago
கமுதி: கமுதி குண்டாறு பாலம் அருகே அமைந்துள்ள சக்தி பாபா கோயிலில் ஆதிவராஹி அம்மனுக்கு கார்த்திகை மாத பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வராஹி அம்மனுக்கு பால், சந்தனம்,பன்னீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பூஜையில் கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி உட்பட கமுதி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா கமிட்டியாளர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.