உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணவர்கள் தீய பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அங்கப்பிரதட்சணமாக கிரிவலம் வந்த சாமியார்

மாணவர்கள் தீய பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அங்கப்பிரதட்சணமாக கிரிவலம் வந்த சாமியார்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் மஹாதீபம் தொடர்ந்து, மலை உச்சியில், 11 நாட்களுக்கு எரியும். இந்த 11 நாட்களும் பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று, பள்ளி கல்லூரி மாணவர்கள் தீய பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி சிதம்பரத்தைச் சேர்ந்த ஓம்சந்ரு சாமியார் அங்கப்பிரதட்சணமாக  கிரிவலம் சுற்றி வந்து வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !