உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய பக்தர்கள் சுவாமி தரிசனம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய பக்தர்கள் சுவாமி தரிசனம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம்  காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வரும் நிலையில் இன்று  சுமார் 100  நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை கோயில் நிர்வாக அதிகாரி ராமாராவ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு ஆகியோர் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்ததோடு  கோயிலின் கட்டிடக் கலையையும் சிற்பக் கலையையும் மிக ஆச்சரியமாகவும் ஆர்வத்தோடு  கண்டு பாராட்டுகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !