காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா : வெண்பூசணியில் தீபமேற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :707 days ago
கம்பம்; கம்பம் கம்ப ராயப் பெருமாள் கோயிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நேற்று மாலை நடைபெற்றது. திரளாக பெண்கள் வெண்பூசணி, தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலில் கால பைரவர் ஜென்மாஷ்டமி விழா நேற்று மாலை நடைபெற்றது. பைரவர் மகா அபிஷேகம், கலாசாபிஷேகம் நடைபெற்றது. விசேச அலங்காரத்தில் கால பைரவர் எழுந்தருளினார். மாலை 7 மணியளவில் மகாதீபாரதனை, சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் வெண்பூசனி | தேங்காய்களில் தீபமேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செய்திருந்தது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.